-
-
தேவாரம் – முதல் திருமுறை
0₹220.00இந்நூலில் தமிழ்ப் பண்களுக்குரிய கர்நாடக சங்கீத இராகங்களும், தலப் பெயர்களும் குறிக்கப்பட்டுள்ளன.
-
நயனவிதி
0₹290.00அகத்தியரால் உருவாக்கப்பட்ட இந்நூலானது பலவிதமான நோய்களைத் தீர்க்கும் விதிமுறைகளை எளிமையாக எடுத்துரைக்கிறது.
-
நாயன்மார் கதை
0₹420.00நாயன்மார்களின் தெய்வீக வரலாற்றைத் தனித்துவத்தோடு கதை வடிவில் பேசுகிறது இந்நூல்.
-
நாயன்மார்கள் வினா – விடை
0₹40.00அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் பதிகங்கள், அவர்கள் செய்த அற்புதங்கள் போன்ற பல செய்திகளை உள்ளடக்கி வினா-விடை வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
நால்வர் நான்மணிமாலை
0₹170.00சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவசமயக் குரவர் நால்வர் புகழையும் உரக்கப் பேசுகிறது இந்நூல்.
-
நால்வர் பிள்ளைத்தமிழ்
0₹280.00திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்னும் நால்வரின் சரித நிகழ்ச்சிகளும், அவர்தம் திருவாக்குப் பகுதிகளும் கொண்டு விளங்குகிறது இந்நூல்.
-
நான் கண்ட நால்வர்
0₹170.00திரு.வி.க., வ.வே.சு. அய்யர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியோரின் வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது இந்நூல்.
-
நீதி நூல்கள்
0₹130.00ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நன்னெறி, நல்வழி, உலகநீதி, வெற்றிவேற்கை உள்ளிட்ட நீதிநூல்கள் எளிய விளக்கத்துடன் நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
பக்தித் துளிகள் வினா – விடை
0₹100.00ஔவையாரின் பிறப்பு, அதியமான், பாரியுடன் ஔவை கொண்ட நட்பு, ஔவையாரின் தொண்டு முதலான பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
பட்டினத்தார் பாடல்கள்
0₹190.00தமிழ்நாட்டில் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பட்டினத்தடிகள். அவரின் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 1
0₹400.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 2
0₹420.00பதினொன்றாம் திருமுறையில் உள்ள நூல்களை ஆராய்ந்தால் பல சொல்வழக்காறுகளும், பொருட் சிறப்பும், மரபுகளும் தெரியவரும். பல காலமாகத் தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கையும், வழிபாடும், பக்தியும், மெய்ஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வழி வந்து விளங்கி மக்களுடைய மன அமைதிக்கும், இன்பத்திற்கும் காரணமாக இருந்தன என்பதையும் உணரலாம்.
-
பாம்பன் சுவாமிகள் வரலாறு வினா-விடை
0₹30.00பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றையும், சிறப்புகளையும் எளிய நடையில் வினா-விடைகளாகத் தொகுத்து இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – தெளிவுரை
0₹380.00மாணிக்கவாசகரின் திருவாசகம் பக்தி சுவையும், மனத்தை உருக்கும் தன்மையும் கொண்டது. பாடல்களுக்கான விளக்கங்களுடன் இந்நூல் அமைந்துள்ளது.