-
பதினொன்றாம் திருமுறை பாகம் 1
0₹400.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 2
0₹420.00பதினொன்றாம் திருமுறையில் உள்ள நூல்களை ஆராய்ந்தால் பல சொல்வழக்காறுகளும், பொருட் சிறப்பும், மரபுகளும் தெரியவரும். பல காலமாகத் தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கையும், வழிபாடும், பக்தியும், மெய்ஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வழி வந்து விளங்கி மக்களுடைய மன அமைதிக்கும், இன்பத்திற்கும் காரணமாக இருந்தன என்பதையும் உணரலாம்.
-
பழநி தலபுராணம்
0₹430.00முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடு பழநி. இத்தலத்தின் வரலாறு, புகழ் போன்றவை இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.
-
பன்னிரு ஆழ்வார்கள்
0₹60.00பன்னிரு ஆழ்வார்கள் அவதரித்த ஊர், காலம், இவர்களால் பாடப்பட்ட திவ்ய தேசங்கள், அதன் சிறப்புகள் என விரிகிறது இந்நூல்.
-
பாடல் பெற்ற 275 தேவாரத் திருத்தலங்களின் சிறப்புக் கையேடு
0₹120.00தேவாரத் திருத்தலங்களை நேரில் தரிசிக்க விரும்புவோர்க்கு இந்நூல் பட்டியல் ஒரு வரப்பிரசாதம்.
-
பாண்டியநாட்டு வைணவக் கோயில்கள்
0₹275.00இந்நூலாசிரியர் பாண்டியநாட்டு கோயில்களின் கட்டட அமைப்பு, சிற்ப அமைப்பு முதலியவற்றை நுட்பமாக ஆராய்ந்து கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
-
பாம்பன் சுவாமிகள் வரலாறு வினா-விடை
0₹30.00பாம்பன் சுவாமிகள் வாழ்க்கை வரலாற்றையும், சிறப்புகளையும் எளிய நடையில் வினா-விடைகளாகத் தொகுத்து இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
0₹40.00புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளையும் மகாலட்சுமியையும் வழிபடும் முறைகள், அவ்வழிபாட்டின் மூலம் சமய நல்லிணக்கத்தின் சிறப்புகளையும் மாண்புகளையும் எடுத்துரைக்கிறது இந்நூல்.