Description
சோழவள நாட்டில் வரலாற்றுச்சிறப்பு மிக்க பழம்பதிகளுள் ஒன்று திருமறைக்காடு. இந்நகரில் மீனாட்சி சுந்தரதேசிகரின் மகனாகப் பரஞ்சோதி முனிவர் பிறந்தார். மதுரை மீனாட்சி அம்மன் இவர் கனவில் தோன்றி, சோமசுந்தரப் பெருமான் மதுரையில் புரிந்த திருவிளையாடல்களை ஒரு நூலாகப்பாடுமாறு பணித்தார். அதன்படி பெருங்காப்பியமாகத் திருவிளையாடற் புராணத்தைப் பரஞ்சோதி முனிவர்பாடி, அருள்மிகு சொக்கநாதர் சந்நிதியில் அரங்கேற்றம் செய்தார். திருவிளையாடல் புராணமானது திருஆலவாய் மான்மியம், மதுரைப்புராணம் என்ற வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இப்புராணமானது மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருஆலவாய்காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.