Description
நம்மாழ்வார் மண், புனல், தீ, காற்று, வெளி, திங்கள், ஞாயிறு, உயிர் என்னும் எண்வகை வடிவுகளிலும் இறைவனைக் கண்டு பிறர் வழிபாட்டுக்கு வழிகாட்டினார். அதேபோல் திருமாலின் அவதாரங்களையும் அவற்றிற்கான விளக்கங்களையும் சிறப்பாக விளக்கியிருப்பது இந்நூலுக்குப் பெருமை சேர்க்கிறது. நம்மாழ்வார், மும்மூர்த்திகளுக்கு மேம்பட்ட பரம்பொருளைத் திருமால் என்னும் பெயராலே வழிபட்டார். வழிபாடு மனிதனை விடாது. அது இயல்பாக நிகழ்ந்து வரும். தற்பயன் கருதாமையே வழிபாடாகும். இது அக வழிபாடு, புற வழிபாடு என இருவகைப்படும். ஆழ்வார் பாடல்கள் சமரச ஞானம் கொண்டவை. இதுபோன்று விளக்கம் தந்து இலங்குகிறது ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும்’ என்னும் இந்நூல்.





Reviews
There are no reviews yet.