Description
ஊர் என்று சொன்னவுடன், ‘ஊரெனப்படுவது உறையூர்’ என்ற தொடர் நினைவுக்கு வருகிறது. ஊர் என்று உச்சரிக்கக் கூடிய ஒரு பெயர் சிரியாவில் தற்போதும் உள்ளதாக வரலாற்றாசிரியர் குறிப்பிடுவர். மெசபடோமியா நாகரிகத்தில் ஊர் என்ற பெயர் உண்டென்பர். தொல்காப்பியர் பூமியினுடைய அமைப்பை உணர்ந்து திணைகள் வகுத்தார். ஒவ்வொரு நிலத்திலும் வாழ்கின்ற மனிதர் அந்தந்தப் பகுதிகளுக்கு நிலத்தின் பெயர்களையொட்டியே பெயர் சூட்டினர். குறிஞ்சி நில ஊர் குறிச்சி எனப்பட்டது. முல்லை நில ஊர் பாடி எனப்பட்டது. பாலை நில ஊர் கோடு என்று பெயர் பெற்றது. மருத நில ஊர்கள் ஊர், குடி, கூடல் எனப்பட்டன. நெய்தல் நிலத்துப்பகுதிகள் பாக்கம், பட்டினம், நெய்தலூர் என அழைத்தனர்.





Reviews
There are no reviews yet.