Description
ஆழ்வார்கள் வழிக்குரவர் என்பதற்கு ஆழ்வார்கள் வழியில் வந்த குரவர்’ என்பது பொருள். இவர்களை ஆச்சாரியர்கள் என்பார்கள் வைணவப் பெரியோர்கள். அங்ஙனம் ஆழ்வார்கள் வழிவந்தவர்கள் பலர். அவர்களுள் இங்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர்கள், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், இராமாநுசர் என்னும் ஐவர் ஆவர். ஆழ்வார்கள் வழியில் வந்த இக்குரவர்கள் வைணவ சமயம் வளர்வதற்குக் காரணம் ஆனவர்களாவர்.இவர்களுள்ளும் நாதமுனிகள், ஆளவந்தார், இராமாநுசர் என்னும் இம்மூவர் முதன்மையானவர்கள். மணக்கால் நம்பியும், ஆளவந்தாரும் வைணவத்தின் மீது மிகவும் மதிப்புடையவர்களாக இருந்து வளர்த்து வந்தனர். இவர்களைப் பற்றிய செய்திகள் மிகவும் எளிமையாக இந்நூலில் கூறப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.