Description
‘அஷ்டப் பிரபந்தம் கற்றவன் ‘அரைப்பண்டிதன்‘ என்பது பழமொழி. இந்நூலின் எட்டுச் சிற்றிலக்கியங்களையும் பயில்பவர் மற்றப் பேரிலக்கியங்கள் எவையும் எளிதாகக் கற்றின்புறும் தகுதியை மிகுதியும் பெறுவர். தமிழிலக்கியக் கோயிலுக்குள் புகுவோர்க்கு இது ஒரு கருவிநூல்.
இந்நூலின் ஆசிரியர் பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் திவ்யகவி எனப் போற்றப்படுபவர். திருஅரங்கப் பெருமானையே பெரிதும் நினைத்துத் திளைத்துப் பாடியதால் அழகிய மணவாள தாசர் என்பது இவர்க்குரிய மற்றொரு பெயர்.
இந்நூல் ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று திட்டமிட்டு எழுதப்பட்ட நூலன்று . ஆசிரியர் மனமுவந்து மாலிடம் காதலாகிக் கனிந்து பாடியவை. பின்னர் எட்டுத் தனித்தனி நூல்களையும் இணைத்து ‘அஷ்டப் பிரபந்தம்‘ என்று பெயர் சூட்டப்பட்டது. ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கு நாலாயிரம் என்று இட்டதுபோல் இந்நூலுக்கு ‘அஷ்டப் பிரபந்தம்‘ எனப் பெயரிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.





Reviews
There are no reviews yet.