Filter By Price
  • 27 நட்சத்திரக் கோயில்கள்

    0

    நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைகிறது. இந்நம்பிக்கைகளை வளர்த்து வளப்படுத்தப் பல்வேறு சாத்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. நம்முடைய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே சாத்திரங்கள், தத்தமது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ளன. பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. ‘27 நட்சத்திரக் கோயில்கள்’ என்னும் இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.

    90.00
    Add to cart
  • 48 முதுநிலை திருக்கோயில்கள்

    0

    தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தமிழகக் கோயில்கள் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்ககாலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

    நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து

    என நெடுநல்வாடையில் கோயில் குறித்து குறிப்பிடப்படுகிறது. இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    320.00
    Add to cart
  • Thiru Murugattru Padai (English)

    0

    அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.

    250.00
    Add to cart
  • ஆடவல்லான் ஆதிரை வழிபாடு

    0

    ஐந்தொழில் நடனம் புரியும் ஆடல்வல்லானாகிய நடராஜப் பெருமானின் ஆருத்ரா தரிசன சிறப்புகளையும், இறை வழிபாட்டின் வகைகளையும் எடுத்துரைக்கும் விதமாக இந்நூலில் அமையப் பெற்றுள்ளது.

    50.00
    Add to cart
  • சிவபுரி புராணம்

    0

    சிவபுரியின் வரலாறு மற்றும் பெருமைகளோடு இத்தலம் குறித்த திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோரின் பாடல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

    280.00
    Add to cart
  • சீகாழிப் புராணம்

    0

    பன்னிரு திருநாமங்கள், பன்னிரு தீர்த்தங்கள், தலவிசிட்ட அத்தியாயம் முதல் அண்டர்கள் பூசித்த அத்தியாயம் வரையுள்ள பல தகவல்களைக் கொண்டது இந்நூல்.

    200.00
    Add to cart
  • திருக்கண்டியூர் புராணம்

    0

    திருக்கண்டியூர் என்பதற்கான பெயர்க்காரணம் மற்றும் பல அரிய தகவல்களைக் கொண்டு இத்தலபுராணம் உருவாக்கப்பட்டுள்ளது.

    50.00
    Add to cart
  • திருக்குடவாயிற் புராணம்

    0

    இறைவன் – இறைவி ஆகியோரின் பெருமைகளையும், தலத்தின் வரலாற்றையும் கொண்டு பல அத்தியாயங்களாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    90.00
    Add to cart
  • திருமயிலைத் திருப்புகழ்

    0

    திருமயிலையின் சிறப்பு, அதன் வரலாறு மற்றும் இறைவன் – இறைவியின் மேன்மைகளைத் துதிக்கிறது இந்நூல்.

    70.00
    Add to cart
  • திருவேடகப் புராணம்

    0

    இந்நூலில் பாயிரம் முதல் முனிவர் பூசனைப் படலம் வரை உள்ள பதின்மூன்று படலங்களும் அதற்கான புராண வசனங்களும் இடம்பெற்றுள்ளன.

    180.00
    Add to cart
  • பதினொன்றாம் திருமுறை பாகம் 1

    0

    சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.

    400.00
    Add to cart
  • பதினொன்றாம் திருமுறை பாகம் 2

    0

    பதினொன்றாம் திருமுறையில் உள்ள நூல்களை ஆராய்ந்தால் பல சொல்வழக்காறுகளும், பொருட் சிறப்பும், மரபுகளும் தெரியவரும். பல காலமாகத் தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கையும், வழிபாடும், பக்தியும், மெய்ஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வழி வந்து விளங்கி மக்களுடைய மன அமைதிக்கும், இன்பத்திற்கும் காரணமாக இருந்தன என்பதையும் உணரலாம்.

    420.00
    Add to cart
  • வழிபாட்டுப் பாடல்கள்

    0

    விநாயகர் துதிப்பாடல் தொடங்கி லலிதாம்பிகை நவரத்ன மாலை துதிப்பாடல் வரை இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.

    170.00
    Add to cart
  • வள்ளலார் – வழிக்கதைகள்

    0

    மகான் வள்ளலாரின் அருள் கொள்கைகளைத் திரட்டி கதைப்போக்கில், எட்டுக் கதைகள் கொண்டு இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

    60.00
    Add to cart
  • வைணவமும் தமிழும்

    0

    வைணவ சமயம் குறித்த கருத்துகளோடு வைணவ ஆச்சார்யார்கள், தத்துவங்கள், திவ்ய தேசங்கள் பற்றிய விவரங்களும் இந்நூலில் பொதிந்துள்ளன.

    350.00
    Add to cart
  • ஸ்ரீ ஆண்டாள் சமேத ரெங்க மன்னர் போற்றி 108 வெண்பாக்கள்

    0

    இந்நூலில் ஆண்டாள் ரெங்கமன்னாரைப் போற்றி 108 வெண்பாக்களும், ரேணுகாதேவி ஜமதிக்கினி வரலாறு, பர்வதவர்த்தினி இராமநாதர் போற்றி 108 வெண்பாக்களும் இடம்பெற்றுள்ளன.

    90.00
    Add to cart