-
நம்முடைய வாழ்க்கை நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைகிறது. இந்நம்பிக்கைகளை வளர்த்து வளப்படுத்தப் பல்வேறு சாத்திரங்கள் உள்ளன. அவற்றை நம்புபவர்களுக்கு அவை நிச்சயம் பலனளிக்கின்றன. நம்முடைய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வேதங்கள்தான். எனவே சாத்திரங்கள், தத்தமது விதிவிலக்குகள் மற்றும் பரிகாரங்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ளன. பிறக்கும் நேரத்தை வைத்து ஒருவரது நட்சத்திரம் தீர்மானிக்கப்படுகிறது. அப்படிப்பட்டவரது வாழ்க்கையின் இதர காலகட்ட பலன்களை ஓரளவுக்குத் தெரிந்துகொள்ள நட்சத்திர பலன்கள் உதவுகின்றன. ‘27 நட்சத்திரக் கோயில்கள்’ என்னும் இந்நூலில் ஒவ்வொரு நட்சத்திரத்தின் அதிதேவதை, பரிகாரம், பரிகாரத் தலத்தின் சிறப்பு, அமைவிடம், தல மரம், தலவரலாறு உள்ளிட்ட பல தகவல்கள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.
₹90.00
-
தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றைத் தமிழகக் கோயில்கள் தொடர்ந்து பிரதிபலித்து வந்திருக்கின்றன. தமிழில் சங்ககாலப் பாடல்களிலேயே கோயில்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
நூலறி புலவர் நுண்ணிதில் கயிறிட்டுத் தேஎங் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
என நெடுநல்வாடையில் கோயில் குறித்து குறிப்பிடப்படுகிறது. இந்திய கோயில்களில் தமிழ்நாட்டுக் கோயில்களை வேறுபடுத்திக் காட்டுபவைகளில் மிகவும் முக்கியமானவை அதன் கோபுரங்கள். கோபுரங்களைப் பொறுத்தவரை, ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் கோயில் தெரிய வேண்டும் என்பதற்காக உயரமாகக் கட்டப்பட்டன. அத்தகு பிரமாண்டமாகத் தோற்றம் பெற்றிருக்கும் முதுநிலைத் திருக்கோயில்களின் வரலாறுகளைச் சுருக்கமாக எடுத்துரைக்கும் நூலாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
₹320.00
-
அறுபடை வீடுகளில் கொலுவிருக்கும் முருகப்பெருமானின் அருட்திறம், அத்தலத்தின் பெருமை போன்றவை இந்நூல் வழியே விளக்கப்பட்டுள்ளது.
₹250.00
-
முருகப்பெருமான் திருமணக் கோலத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் முருகப்பெருமானின் அருட்திறம் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
₹50.00
-
அழகர் கோயில் குறித்து இலக்கியங்களில் பதிவு மற்றும் சமூகத் தொடர்பை மக்களின் வாழ்வியலோடு விளக்கும் ஓர் ஆய்வுக் களஞ்சியம்.
₹530.00
-
அக்கினி பகவானால் கூறப்பட்ட புராணம் ஆதலால் அக்கினி புராணம் எனப்படுகிறது. இப்புராணத்தில் பல்வேறு தெய்வீக நிகழ்வுகள், உயிரினங்களின் தோற்றம் முதலானவை விரிக்கப்பட்டுள்ளன.
₹280.00
-
அக்கினி பகவானால் கூறப்பட்ட புராணம் ஆதலால் அக்கினி புராணம் எனப்படுகிறது. இப்புராணத்தில் பல்வேறு தெய்வீக நிகழ்வுகள், உயிரினங்களின் தோற்றம் முதலானவை விரிக்கப்பட்டுள்ளன.
₹120.00
-
பகவான், கருடபகவானுக்குச் செய்யும் உபதேசங்கள், உலக மக்கள் அனைவருக்கும் வேண்டிய உபதேசங்களாக இந்நூல் அமைந்துள்ளது.
₹90.00
-
திருக்கார்த்திகை வழிபாட்டின் சிறப்புகளைச் சொல்லி இசைபட வாழ சொற்சிலம்பாடுகிறது இந்நூல்.
₹60.00
-
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமையப்பட்டுள்ள சோழர் கால கோயில்களின் வரலாறுகள் இந்நூல் இடம்பெற்றுள்ளன.
₹410.00
-
சைவத் தலமான ஸ்ரீ காளத்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கிற பெயரோடு ஞானப்பிரசுனாம்பிகை தாயாரோடு அருள்பாலிக்கின்றார். சீகாளத்தி தல புராணத்தினை வசனத்துடன் விளக்கும் நூலாகும்.
₹130.00
-
சோழர்களின் கோயிற்பணிகளை வரலாற்றுப் பின்புலத் தகவல்களோடு ஆராய்கிறது இந்நூல்.
₹160.00
-
தியானம் குறித்தும் தியானம் பற்றிய ஆராய்ச்சிகள் குறித்தும் இந்நூல் வழி அறியலாம்.
₹120.00
-
திருக்கண்டியூர் என்பதற்கான பெயர்க்காரணம் மற்றும் பல அரிய தகவல்களைக் கொண்டு இத்தலபுராணம் உருவாக்கப்பட்டுள்ளது.
₹50.00
-
வேதகிரி உத்திரக்கொடி நந்திபுரி இந்திரபுரி பிரம்மபுரி பரிதிபுரி சிவபுரம் தென்கைலாயம் தருமகோடி எனும் பல பெயர்களால் பற்பல காலங்களில் அழைக்கப்பட்ட திருக்கழுக்குன்றம் எனும் தலத்தினை விரிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
₹470.00
-
இறைவன் – இறைவி ஆகியோரின் பெருமைகளையும், தலத்தின் வரலாற்றையும் கொண்டு பல அத்தியாயங்களாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
₹90.00