-
ஆழ்வார்கள் வினா விடை
0₹45.00பன்னிரு ஆழ்வார்களின் வரலாறு, இறையுணர்வு, பாடிய பாடல்கள் உள்ளிட்ட பல செய்திகளைக் கொண்டு வினா-விடை வடிவில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
-
இசையும் யாழும்
0₹250.00இசை தோன்றிய வரலாறு, யாழின் தொன்மை, அதன் வகைகள், இசைவாணர்கள், பாணர்கள், பாடினிகள் போன்றோரைப் பற்றி இந்நூலில் அறியலாம்.
-
கந்தவேள் கருணை
0₹550.00கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, கந்தர் கலிவெண்பா மற்றும் திருப்புகழில் உள்ள புராண நிகழ்வுகள் யாவும் தொகுக்கப்பட்டு எளிய நடையில் இந்நூல் வெளியிடப்படுகிறது.
-
-
சுவாமி விவேகனந்தர் வரலாறு வினா விடை
0₹45.00சுவாமி விவேகானந்தர் வாழ்வியல் நிகழ்வுகளையும் ஆன்மிக ஈடுபாடுகளையும் எளிய நடையில் வினா-விடை மற்றும் குறிப்பு வடிவில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
சைவமும் வைணவமும்
0₹240.00சைவம், வைணவத்தின் தொன்மை, அதன் இலக்கிய தோற்றங்கள், இறையடியார்கள் பற்றிய பல செய்திகளைக் கொண்டது இந்நூல்.
-
தமிழர் மரபில் அறக்கோட்பாடுகள்
0₹100.00வள்ளுவர் காலம் முதல் தற்காலம் வரை தமிழ் சமுதாயத்தின் அறிவியல் கோட்பாடுகளையும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அறக்கருத்துகளையும் உள்ளடக்கியது இந்நூல்.
-
தமிழில் வழிபாடும் இந்து சமய அறநிலையத்துறை தோன்றிய வரலாறும்
0₹50.00ஓமந்தூரார் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது இந்து சமய அறநிலையத்துறைக்கென்று ஏற்படுத்தப்பட்ட சட்டமும், தமிழில் வழிபாடு என்னும் கட்டுரையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
ஆக்கம்: ஓமந்தூரார் சட்டமன்ற உரை மற்றும் செந்தமிழ்செல்வி கட்டுரைகளின் தொகுப்பு
-
தமிழ் வளர்த்த செம்மல்கள்
0₹370.00கி.ஆ.பெ., கி.வா.ஜ., ம.பொ.சி., ஆகிய முத்தமிழ் அறிஞர்களின் செம்மொழி தமிழ் ஆய்வுக்கு இந்நூல் ஓர் அரிய மகுடம்.
-
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்
0₹190.00திருக்கோளூர் பெண்பிள்ளை கூறிய வைணவ மறைபொருள்களைக் கொண்ட இந்நூல், கதை வழியாக நீதி உரைக்கும் பாங்குடன் அமைந்துள்ளது.
-
திருப்பாவை, திருவெம்பாவை
0₹200.00இறை சிந்தனை, மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்க வேண்டிய தேகப்பயிற்சி போன்றவை விளக்கவுரையுடன் பதவுரை, உள்ளுறை கொண்டு இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
-
திருமறைத், திவ்வியப்பிரபந்தத் திருப்பாடல் திரட்டு
0₹80.00இந்நூலின் முதற்பகுதியில் சைவசமயக் குரவர்கள் வரலாறும், பதிகங்களும், இரண்டாம் பகுதியில் ஆழ்வார்கள் பன்னிருவர் வரலாறும், பாசுரங்களும் இடம்பெற்றுள்ளன.
-
தென்கயிலை வடகயிலை திருப்பதிகங்கள்
0₹120.00வடக்கே வடகயிலாயம் இருப்பது போல் தெற்கே தென்கயிலாயம் இருந்துள்ளது. இவ்விரு இடங்களிலும் வீற்றிருக்கும் இறைவன் ஒருவனே. எம்பெருமான் ஈசனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற இந்நூல் ஓர் அருட்கொடையாகும்.