Description
இறைவனை அதிகாலையில் எழுப்புவதற்குப் பாடப்படுவது சுப்ரபாதமாகும். இதனைத் தமிழில் ‘திருப்பள்ளியெழுச்சி’ என்று அழைப்பர். இறைவனைத் தாயாக, குழந்தையாக, காதலனாக, நண்பனாகப் பாவித்து மனமுருகி வழிபடுவது உண்டு. அந்த வகையில் இறைவனை தம்மில் ஒருவராகக் கருதி இறைவனை வழிபடும் நயங்களைப் போதித்த ஆழ்வார்களும், பக்தர்களும் அதிகாலையில் எழுந்தது முதல், இரவு உறங்கச் செல்லும் வரையில், நம் எல்லாச் செயல்களையும் அவருக்கும் செய்து மகிழ்ச்சியைப் பெறுவது ஓர் அழகான அனுபவம் ஆகும். அவை நம் மனத்தில் மிக அருமையான மற்றும் செழுமையான உணர்வை அளிக்கும். இத்தகைய உணர்வுகளின் அடிப்படையில் எழுந்தவைதான் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும், வழிபாட்டுப் பாடல்களும் ஆகும்.





Reviews
There are no reviews yet.