Description
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், திருச்சீரலைவாய் எனவும் அழைக்கப்படுகிறது. முற்காலத்தில் தேவர்களைத் துன்புறுத்தி வந்தான் சூரபத்மன். சூரனை அழிக்க தேவர்கள் விரதம் இருந்து முருகனை வேண்டினர். முருகனும் சூரனை வெற்றிகொண்டு அவனை ஆட்கொண்டார். வருடந்தோறும் இதைக் கொண்டாடும் விதமாக இவ்வாலயத்தில் முருக பக்தர்கள் ஆறு நாள் சஷ்டி விரதம் இருந்து கந்தசஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும். இன்று மக்களிடையே முருகன் தலமாகவே பிரசித்தி பெற்றுள்ளது. கடற்கரை ஓரத்தில் கருணை வெள்ளமாகக் காட்சித்தரும் பதியாகத் திகழ்கிறது. கருவறைக்குள் முருகன் பூசித்த சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளன. சிவாலயத்திற்குரிய எல்லா மூர்த்தங்களும் இத்திருக்கோயிலில் உள்ளன.





Reviews
There are no reviews yet.