Description
சிதம்பரத் திருத்தலத்தை தில்லைவனம் என்றும் சொல்வார்கள். இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. சுமார் ஐம்பத்தொரு ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவனின் தலம் இது. தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புதத் திருத்தலம். உலகத்தை வென்ற சோழர் குலத்தின் அடையாளம் இத்திருக்கோயில் என்றால் அது மிகையாகாது. ஆன்மிகமும், கலையும் வளர்த்த தமிழ் மரபின் சாசனம். பக்தியையும் தாண்டி வாழ்க்கையை வெளிப்படுத்தும் காலத்தால் அழியாத சின்னம். இரத்தினத்தால் செய்யப்பட்ட நடராசர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், இப்போதும் சிதம்பர ஆலயத்தில் பூஜித்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.





Reviews
There are no reviews yet.