Description
செந்தமிழும் சிவனெறியும்’ உடலுயிர் போன்று பிரிக்கவொண்ணாததாய் தொன்றுதொட்டு ஒன்றுபட்டு வரும் அழிவிலா மெய்ப்பொருள். செம்மை நிறத்தான் சிவன் ஒளி வண்ணன். அவன் திருவடிகளை அடைவதற்கான ஒளி நெறி.செந்தமிழ் மறை எனப்படும் முதல் ஏழு திருமுறைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு உண்மை வரலாற்றுப் பேரிலக்கியமாகவும் இவை திகழ்கிறது. இதன்கண் நூற்றுக்கணக்கான தலங்கள், திருக்கோயில்கள், ஆறுகள், ஆன்றோர், ஆளப்படுவோர் வரலாறு என அனைத்தும் இதனுள் விரிவாக நவிலப்பட்டுள்ளன. இந்நூலின் சிறப்பு கருதி இதை தேவார அகராதி என்றும், தேவார இலக்கணம் என்றும் புகழ்வார்கள். இதன்கண் திருக்கோயில் வழிபாடுகள், திருவிழாக்கள். இசைக்கருவிகள், இயல், இசை, நாடகங்கள் எனப் பலவும் தொகுக்கப்பட்டுள்ளன. இதனுள் அரிதினும் அரிதான பல நுண்பொருள்களும் விளக்கப் பட்டுள்ளன. இக்காலச் சமூகத்தினருக்குப் பயன்படும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இது போன்ற நூல்களை வருங்காலச் சந்ததியினர் படித்துப் பொருள் உணர்ந்து வாழ்க்கையில் பின்பற்றுவார்கள் எனில், வாழ்வில் வளமை ஏற்படும் எனக் கருதி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.