Description
குறிஞ்சிக் கடவுள் என தமிழரால் போற்றப்படும் சிவக்குமரன் திருமுருகனை நினைந்து நெக்குருகப் பாடிய அருளாளர்கள் அநேகர். அத்தோத்திரங்கள் யாவும் இன்னமும் திருக்கோயில்களில் தனிப் பாசுரங்களாகவும், குரு சந்நிதானங்களில் பாராயணம் செய்வதற்கான திருப்பாடல்களாகவும், மேடைகளில் தமிழிசையாகவும், முருக அடியார்களின் அகங்களில் அருளிசையாகவும், இல்லங்களில் மெய்யன்பர்கள் தங்கள் உணர்வுக்கும் வேண்டுதலுக்கும் வடிகால் தேடும் வாஞ்சைமிகு வரிகளாகவும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
பாம்பன் திருமிகு குமரகுருதாச சுவாமிகள் அருளிய “சண்முகக் கவச”த்திற்கு பலர் உகந்த விரிவுரை வழங்கியுள்ளனர். ஆனால் சமய இலக்கிய உலகில் ஒரு புதிய வடிவத்தில், புதுமைமிகு கோணத்தில் சண்முகக் கவசத்திற்கு திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் ‘பொருளுரை’ ஈன்றுள்ளது நம்மை வியப்பில் திக்குமுக்காட வைக்கின்றது.





Reviews
There are no reviews yet.