Description
திருஅருட்பிரகாச வள்ளலார் ‘இறைவன் ஒருவனே, அவன் ஒளி வடிவினன்’ என்பதையும், ‘அருட்பெருஞ்சோதியாக விளங்கும் இறைவனை அடைவதற்குத் தனிப்பெருங்கருணையே கருவி! என்பதையும் உலகோர்க்கு உணர்த்த சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினை வடலூரில் நிறுவினார். உலகெலாம் உய்ய உயரிய நெறிகண்ட அருட்பிரகாச வள்ளலார் 1874- ஆம் ஆண்டு தைப்பூசத் திருநாளன்று இறவாநிலை எய்தினார். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த தாயுமான சுவாமிகள். தவநெறியில் சிறந்து விளங்கி பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடி வழிபட்டார். இறுதியில் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம் என்னும் ஊரில் சமாதி அடைந்தார். இந்நூலில் தாயுமானவரும் வள்ளலாரும் சன்மார்க்க நெறியினை வாழ்வியல் நெறியாக எடுத்துரைக்கின்றனர். சமயம் சாராது இருவரும் அருள்நெறியின்பாற்பட்டவர்கள். அருளனுபவத்தின் பிழிவே இருவர் பாடல்களும். இறைவனை அருளால் மட்டுமே அறியமுடியும் என்பதை இருவரும் எடுத்தியம்புகின்றனர். இவை போன்ற பல செய்திகளை உள்ளடக்கியதாக இந்நூல் திகழ்கின்றது.





Reviews
There are no reviews yet.