Description
சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.





Reviews
There are no reviews yet.