Description
கவியோகி சுத்தானந்த பாரதியார் சிவகங்கையில் 11-05-1897 அன்று பிறந்தார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர், வேங்கட சுப்ரமணியன். புலவர் தெய்வசிகாமணி எனும் ஆசிரியரிடம் தமிழ் கற்று இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பல மொழிகளைக் கற்றறிந்தவர். திருக்குறளை ஆங்கிலத்தில் அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் மொழிபெயர்த்தார். சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் இவருக்கு ‘கவியோகி’, ‘பாரதி’ என்னும் பெயர் சூட்டினார். சீரடி சாய்பாபா, இரமண மகரிஷி ஆகியோர் இவருடைய ஆன்மிக உயர்வுக்கு வழிகாட்டினர்.





Reviews
There are no reviews yet.