Description
பண்டைய காலத்தில் தெய்வத்தின் கதைகளும், வரலாறுகளும் கலந்தவைகள் தான் புராணங்களாக விளங்கி வந்துள்ளன. பதினெண் புராணங்களுள் விஷ்ணு புராணம் எனப்படும் தெய்வத்திருமால் புராணம் வைணவர்களால் போற்றப்படக்கூடியதாகும். இந்நூலில் ஸ்ரீ கிருஷ்ணன் வரலாறும், பெருமைகளும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தின் தோற்றம், வேதவியாசர்கள், பூலோகத்தின் பிரிவுகள், மனுவந்தரங்கள், வேதங்கள், சிரார்த்த வகைகளும் முறைகளும், அனமித்திரன் வம்ச வரலாறு, கலியுக தர்மம் உள்ளிட்ட பல தலைப்புகளுடன் இந்நூல் அமைந்துள்ளது. மேலும், தேவர்கள், கந்தர்வர்கள், அரக்கர்கள், முனிவர்கள், மன்னர்கள் போன்றவர்களின் பரம்பரையை விளக்கும் நூலாக விஷ்ணு புராணம் உள்ளது.
மகாவிஷ்ணு வரங்கள் வழங்கும் வள்ளலாகவும் நீல வண்ணப் பெருமாளாகவும் விளங்கக் கூடியவன். அவனே, இராமனாக, கண்ணனாக இம்மண்ணில் வந்து அவதரித்தான். இங்கு அனைத்தையும் இயக்குபவன் அவனே; அனைத்திற்கும் ஆதாரப் பரம்பொருளும் அவனே, அப்பெருமைகளை உடைய மகாவிஷ்ணுவைப் பற்றிய புராணமே விஷ்ணு புராணம் ஆகும்.





Reviews
There are no reviews yet.