-
அஷ்டப்பிரபந்தம்
0₹490.00எட்டுச் சிற்றிலக்கியங்களையும் பயில்பவர் மற்றப் பேரிலக்கியங்கள் எவையும் எளிதாகக் கற்றின்புறும் தகுதியை மிகுதியும் பெறுவர். தமிழிலக்கியக் கோயிலுக்குள் புகுவோர்க்கு இது ஒரு கருவிநூல்.
-
திருக்குற்றாலக் குறவஞ்சி
0₹220.00இசைக்காவியத்தில் இறைவன் பவனி வருதல், வசந்தவல்லியின் அழகு, குறத்தி வருதல், குறத்தியின் அழகு, குறத்தி மலை வளத்தைப் பற்றி பேசுதல், குறி சொல்லும் தன்மை ஆகியவற்றை உள்ளடக்கியது இந்நூல்.
-
திருவிசைப்பா திருப்பல்லாண்டு
0₹180.00பன்னிரு திருமுறைகளின் வரிசையில் ஒன்பதாம் திருமுறையான திருவிசைப்பா திருப்பல்லாண்டு தனிச் சிறப்புடையது. இது அளவால் மிகவும் குறைந்த பாடல்களைக் கொண்டும், இந்நூல் முழுவதும் இசைப் பாட்டு வடிவத்தைக் கொண்டும் அமைந்துள்ளது.
-
நாச்சியார் திருமொழி
0₹80.00தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர் ஆண்டாள். கண்ணனைத் தனது நாயகனாகக் கொண்டு இவர் பாடியதே இந்நூலாகும்.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 1
0₹400.00சைவசமயத்தின் ஞானக் கருவூலமாகத் திகழும் சைவத்திருமுறைகள் பன்னிரண்டாகும். இதில் பதினொன்றாம் திருமுறையானது காரைக்கால் அம்மையார் உட்பட பன்னிரண்டு அடியவர்கள் பாடிய பாடல்களைக் கொண்டதாகும். இதனை ‘சைவப் பிரபந்த மாலை’ அல்லது ‘சைவப் பிரபந்த திரட்டு’ எனவும் அழைப்பர். ஏனைய திருமுறைகளுக்கு இல்லாத சிறப்பு ஒன்று, இதற்கு உண்டு. ஆலவாய் இறைவர் இயற்றிய திருமுகப் பாசுரம் இந்தத்தொகை நூலின் முதலில் திகழ்கிறது. மற்றுமொரு சிறப்பாக இத்திருமுறையிலே கடைச்சங்க காலத்தில் நக்கீரரால் இயற்றப்பெற்ற திருமுருகாற்றுப்படையும் இதன்கண் இடம்பெற்றுள்ளது.
-
பதினொன்றாம் திருமுறை பாகம் 2
0₹420.00பதினொன்றாம் திருமுறையில் உள்ள நூல்களை ஆராய்ந்தால் பல சொல்வழக்காறுகளும், பொருட் சிறப்பும், மரபுகளும் தெரியவரும். பல காலமாகத் தமிழ்நாட்டில் தெய்வ நம்பிக்கையும், வழிபாடும், பக்தியும், மெய்ஞ்ஞானமும், தத்துவ ஆராய்ச்சியும் வழி வந்து விளங்கி மக்களுடைய மன அமைதிக்கும், இன்பத்திற்கும் காரணமாக இருந்தன என்பதையும் உணரலாம்.