Description
“நீறில்லா நெற்றி பாழ்” என்பது ஔவை வாக்கு. திருநீற்றின் பெருமை சொல்லவே உருவானது திருஞான சம்பந்தரின் ‘திருநீற்றுப் பதிகம்’. மந்திரச் சொற்களுக்கு நிகரானது திருநீறு. சைவ சமயத்தவரின் அடையாளமாக மட்டுமல்லாமல், தெய்விக ஆற்றல் தரும் புனிதச் சின்னமாகவே திருநீறு போற்றப்படுகிறது. பிறப்பெடுக்கும் எவரும் முடிவில் பிடி சாம்பலாகத்தான் வேண்டும் என்பதால், எதிலும் அளவுக்கு அதிகமான ஆசை வைக்காமல் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதுதான் திருநீறு, ‘நீறு’ என்றால் சாம்பல், ‘திருநீறு’ என்றால் மகிமை பொருந்திய நீறு என்று பொருள். திருநீறு ‘விபூதி’ என்றும் அழைக்கப்படும். விபூதி என்றால் ஞானம், ஐஸ்வர்யம் என்றெல்லாம் பொருள் தரும். ‘பிறப்பு, இறப்பு’ என்னும் அல்லலிலிருந்து விடுவித்து, ஈசனின் திருவடிகளில் நம்மைக் கொண்டு சேர்க்கும் மாமருந்து ‘திருநீறு’ என்று போற்றுகிறது.





Reviews
There are no reviews yet.