Description
சைவத் தலமான ஸ்ரீ காளத்தியில் சிவபெருமான் காளத்திநாதர் என்கின்ற பெயரோடு ஞானப்பிரசுனாம்பிகை தாயாரோடு அருள்பாலிக்கின்றார். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வனமாகயிருந்த இவ்விடத்தில் வாயு லிங்கமாகத் தோன்றிய சிவபெருமானை சிலந்தி தினமும் வழிபட்டு வருமாம். சிவபெருமானுக்கு தன் உமிழ்நீரால் வலையாகப் பின்னி வைத்ததாம். இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. இதில் சிலந்தி இறந்துவிட்டது. இதனால் சிவபெருமான் அதற்கு முத்தி கொடுத்தார். அதேபோல் தினமும் நாகம் ஒன்று லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களைக் கக்கி அர்ச்சனையாகச் செய்து வழிபடும். அதற்குப் பின்னால் வரும் யானை தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து மலர்களால் அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருந்ததால் அந்த நாகத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இதுபோல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்துவிட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்று மூச்சடைக்கச் செய்தது. இறுதியில் யானையும், பாம்பும் இறந்தன. இவற்றின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முத்தியைக் கொடுத்தார் என தலபுராணம் எடுத்துரைக்கிறது.





Reviews
There are no reviews yet.