Description
குமரன் ஆண்டுமலரில் (1928) திரு.வி.க. எழுதிய ‘கடவுள் காட்சி’ என்னும் கட்டுரையே இந்நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. தாயுமானவர் அருளிய “ஐவகை யெனும் பூதம்” என்னும் பாடலின் பொருள் விரிவாக்கக் கட்டுரையே நூலாய் உருக்கொண்டது. அதனால் இந்நூலுக்கு “கடவுள் காட்சியும் தாயுமானாரும்” என்னும் முடி சூட்டப்பட்டது. “நல்லியல்பை விழையும் ஒருவன் சத்துணவு உண்டு வருவானாக அவ்வுணவுடன் அவன் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பானாக அவைகளுடன் அவன் அழிவிலாச் சத்தியத்தை – உண்மையை – கடவுளை – இடையறாது எண்ணி வருவானாக அவ்வாழ்வுடைய மக்களுக்கு ஆண்டவன் அருள் கூடும். அருளால் சமரசு ஞானம் உண்டாகும். சமரச ஞானத்தால் அவன் கடவுள் காட்சி பெறுவன்” என்று நூவை நிறைவு செய்திருக்கிறார்.





Reviews
There are no reviews yet.